நிக்சனை காப்பாற்றும் பிக்பாஸ்...! இவ்வாரம் NO எவிக்க்ஷன் - காரணம் என்ன தெரியுமா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சி வெற்றிக்கரமாக நிழந்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் இவ்வாரம் எவிக்க்ஷன் இல்லை என தெரிவித்துள்ளார்கள்.
Bigg Boss Season 7
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் கடந்த வாரங்களுக்கு முன் ஆரம்பமாகியது.
இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
பின் வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்த ஐவரில் இரண்டு பேர் மாத்திரமே போட்டியில் தற்போது வரை விளையாடுக்கொண்டு இருகிறார்கள்.
இந்நிலையில் இவ்வாரத்திற்கு எவிக்க்ஷன் இல்லை தெரிவித்துள்ளார்கள்.
NO எவிக்க்ஷன்
சென்னையில் பெய்த மழையாலும் உலுக்கி எடுத்த புயலினாலும் பலர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். மின்சார துண்டிப்பு மற்றும் இணைய சேவை முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.
ஆகவே பலராலும் வாக்களிக்க முடியாமல் இருந்ததால், இவ்வாரம் NO எவிக்க்ஷன் என தெரிவித்துள்ளார்கள்.
மேலும் ஆகக்குறைந்த வாக்கு பெற்றிருந்த நிக்சன் வெளியேற்றப்படுவார் என நினைத்திருந்த நிலையில் தற்போது தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |