Bigg Boss 8: தன் உயிரை மாய்த்துக் கொண்ட முக்கிய நபர்: அதிர்ச்சியில் குழுவினர்
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது நான்கு வாரங்களைக் கடந்து பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் வாரவாரம் விஜய் சேதுபதியின் எபிசோடு ஒளிபரப்பாகும் போது அவர் செய்யும் விஷயங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதம் மாறி வருகிறது.
விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விதம் குறித்து கலவையான விமர்சனங்களை அதிகளவில் தற்போது காணமுடிகிறது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதர் திடீரென தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
நேற்று மாலை இச்சம்பவம் நடந்த நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதரின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |