பிக்பாஸில் வந்த பணப்பெட்டி டாஸ்க் - பணத்தை தூக்கி செல்லப்போவது முத்துக்குமரனா?
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 8' நிகழ்ச்சியில் இறுதிக்கட்ட டாஸ்க்கான பணப்பெட்டி டாஸ்கில், யார் பணப்பெட்டியுடன் செல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Bigg Boss Season 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 8 தற்போது சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு மத்தியில் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
குறித்த சீசனில் பல போட்டியாளர்கள் கலந்துக்கொண்டிருந்தாலும், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஜாக்குலின், முத்து, ராயன், சௌந்தரியா, விஷால் மற்றும் பவித்ரா மட்டுமே போட்டியாளர்களாக விளையாடி வருகின்றனர்.
6 பேரில் ஒருவர் தான் கட்டாயம் வெற்றியாளராக முடியும். இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட டாஸ்க்கான பணப்பெட்டி டாஸ்க் வந்தால் ஒருவர் பணப்பெட்டியுடன் வெளியேறுவார்.
ஒவ்வொரு சீசனிலும் பணப்பெட்டி வந்தவுடன், பணம் அதிகரித்துக்கொண்டே செல்லும் அதில் ஒரு போட்டியாளர் தனக்கு பணம் வேண்டும் என்று நினைத்தால், பணப்பெட்டியை எடுத்து செல்லலாம்.
ஆனால் இந்த சீசனில், யார் வேண்டுமானாலும் பணப்பெட்டியை எடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு பணப்பெட்டி இல்லை, பல பணப்பெட்டி என்றும் பிக்பாஸ் கூறியுள்ளார்.
அதாவது வீட்டின் வெளியில் பணப்பெட்டி இருக்கும். குறித்த நேரத்திற்குள் சென்று, பெட்டியை தேடி எடுத்து, வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும். குறித்த நேரத்தில் வரும் நபரே பணப்பெட்டியுடன் போட்டியில் தொடர முடியும்.
குறித்த நேரத்திற்கு வர தவறினால், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
இந்நிலையில் யார் இந்த டாஸ்கில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையில் அதிகம் எழுந்துள்ளது.
பணப்பெட்டியை யார் தூக்குவார்கள்?
பணப்பெட்டி பற்றிய தகவல்கள் வெளிவந்ததிலிருந்து, பிக் பாஸ் தமிழ் 8 இல் யார் பணப்பெட்டியைத் தூக்குவார்கள் என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், விஷால் அல்லது ராயன் பணப்பெட்டியைத் தூக்குவார்கள் என்று ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர்.
இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனால் பணப்பெட்டியை எடுக்கும் எண்ணத்தில் முத்துக்குமரனும் இருக்கிறார். அவரே வெற்றியாளர் என்ற பேச்சும் மக்களிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் முத்துக்குமரன் பெட்டியை எடுத்து சென்றால், வெற்றியாளர் யாராக இருக்க முடியும் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Day100 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 14, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/vRCCPOtJCB
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |