Bigg Boss ஆரம்பமாகி 24 மணிநேரத்திலேயே வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் - யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
Bigg Boss
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து இந்த சீசனை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து 8வது சீசன் நேற்று 6 ஆம் திகதி ஆரம்பமாகியது.
இதில் முதல் தற்போது 15 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ரவீந்தர் சந்திரசேகரன், சச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா SK, தீபக், RJ ஆனந்தி, சுனிதா கோகோய், Jeffry, ரஞ்சித், பவித்ரா ஜனனி, சௌந்தரியா நஞ்சுண்டன் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்து, எபிசோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியையும் கொடுத்தார்.
அதாவது, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என விஜய் சேதுபதி அறிவித்திருந்தார்.
அதையடுத்து தற்போது ஒரு பெண் போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர்
மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா என்பவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் இளம் பிக்பாஸ் போட்டியாளர் ஆவார்.
வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் சாச்சனா வெளியேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவர்தான் அந்த முதல் எவிக்ஷன் என கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |