Bigg Boss 8: டைட்டில் வின்னருக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய பரிசு.., என்ன தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பித்தது.
7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், இந்த சீசனை தன்னால் ஹோஸ்ட் செய்ய முடியாது என்று கூறி அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கினார். தற்போது 106 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டி முடிவுக்கு வர இருக்கிறது.
இதில் டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், செளந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் இருக்கின்றனர்.
அதன்படி, நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் முத்துக்குமரன்தான் டைட்டில் வின்னர் என கூறுகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ரன்னர்-அப் பட்டம் பெறப்போகிறவர் வித்தியாசமான குரலால் மக்களை ஈர்த்த செளந்தர்யா, ரன்னர் அப் பட்டத்தை பெற இருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான், வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறாராம்.
விஜே விஷால் 3வது இடத்திலும், பவித்ரா 4வது இடத்திலும், ரயான் 5வது இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் 8 போட்டியை வெல்லப்போகும் டைட்டில் வின்னருக்கு, ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
அது மட்டுமன்றி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர்களாக இருக்கும் நிறுவனங்களும் பரிசுகளையும் பரிசு பொருட்களையும் வழங்க இருக்கிறது. டைட்டில் வின்னருக்கு, பிக்பாஸ் இல்லத்தில் இருந்த நாட்களுக்கான தாெகையும் மொத்தமாக வந்து சேரும்.
பிக்பாஸ் ரன்னர் அப் பெறப்போகும் போட்டியாளருக்கு, ரூ.5 லட்சம் பரிசாக கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இல்லத்தில் நாட்களை கழித்ததற்கான தொகையும் வந்து சேர்ந்து விடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |