Bigg Boss 9: கடந்த வாரம் வெளியேறிய கலையரசனின் சம்பளம்.., எத்தனை லட்சம் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த 8ஆவது சீசன் முதல் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கி சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், கடந்த வாரம் வெளியேறிய கலையரசனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. அதில், கலையரசன் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார்.
அகோரி என்கிற தன் அடையாளத்தை மாற்றுவதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கலையரசனுக்கு கடந்த வாரம் அதிகமான பீப் வார்த்தைகளை பேசியதாக விஜய் சேதுபதி கடுமையாக விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த வாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கலையரசன் வெளியேறினார்.
இந்நிலையில், கலையரசனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்படி பார்க்கையில் வீட்டிற்குள் கலையரசன் 28 நாட்கள் இருந்துள்ளதால் மொத்தமாக 56 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |