Bigg Boss 9: ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த 8ஆவது சீசன் முதல் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கி சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல அரசியல் கட்சியினர் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பலரும் நிகழ்ச்சியில் தரக்குறைவான வார்த்தைகளை பேசி வருகின்ற நிலையில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் ஒவ்வொருவாரமும் எச்சரித்து வருகின்றார்.
குறிப்பாக போட்டியாளர் திவாகர் சாதி குறித்து இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வாரம் வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி ரெட்கார்டுடன் வந்துள்ளார்.
ஏற்கனவே கனி வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது திவாகர் ரெட் கார்ட் மூலம் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |