பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை! அதன் அறிகுறிகள் என்ன? கண்டறிவது எப்படி?
பிரபல தொகுப்பாளினியும், பிக்பாஸ் நட்சத்திரமுமான அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா.
பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார், இந்நிலையில் இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
அவரது மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவு (Cerebrospinal fluid leak) இருப்பதால், அதற்காக மறு சீரமைக்கும் (re-construction) ஆப்ரேஷன் நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் தான் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.
இவரது உருக்கமான பதிவுக்கு ரசிகர்கள் பலரும், சீக்கிரம் குணமாகி வருவீர்கள் என பதிவிட்டிருந்தனர்.
அர்ச்சனா பாதிக்கப்பட்டதாக கூறிய Cerebrospinal fluid leak என்பது என்ன? இதன் அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
உலகளவில் செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவினால், 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் பொதுவான அறிகுறிகள்
- நீடித்த தலைவலி
- குமட்டல்
- வாந்தி
- மூக்கில் இருந்து நீர் வடிதல்
- வாசனை இழத்தல்
- மங்கலான பார்வை, இரண்டாக தெரிவது
CT மற்றும் MRI ஸ்கேன் பரிசோதனை மூலம் இத்திரவ கசிவின் சரியான இடத்தை கண்டறியலாம்.
ஒருவேளை சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், மூளைக்காய்ச்சல், இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள், பக்கவாதம், கோமா போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுத்து விடும்.
திரவ கசிவை கண்டறிந்த பின்னர், வாழ்க்கை முறைகளில் மாற்றம் செய்துகொள்வதன் மூலமாகவும், முறையான ஓய்வின் மூலமாகவும் சரிசெய்யலாம்.