அரசியலுக்கு இழுக்க வேண்டாம்; உங்களால் கையாள முடியாது! பிக்பாஸ் பாலாஜி ட்வீட்
என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம், உங்களால் கையாள முடியாது என பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் ட்வீட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் பிரபலம் பாலாஜி
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 ன் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிமுகமானவர் பாலாஜி முருகதாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரியாவுடன் ஏற்பட்ட சண்டை, சனம் ஷெட்டி மீதான கருத்து, ஷிவானியுடனான காதல் விவகாரம் உள்ளிட்டவற்றால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பல்வேறு முரண்பட்ட கருத்துகள் பாலாஜி மீது வீசப்பட்டாலும் அந்த சீசனில் இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார்.
அத்துடன் ஓடிடியில் வெளியான பிக்பாஸ் சீசனில் டைட்டில் பட்டத்தையும் வென்றார்.
பாலாஜியின் சர்ச்சை ட்வீட்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (25-03-2023) தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து பாலாஜி முருகதாஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் ”தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். ஆன்லைன் ரம்மி-யுடன் ஒப்பிடும்போது இது அதிகமான மக்களையும் குடும்பத்தையும் கொன்று அழிக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
There are more Orphans in TN like me.
— Balaji Murugadoss (@OfficialBalaji) March 25, 2023
Who lost their family to alcohol.
Don’t pull me into politics.
You can’t handle .
இது அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மற்றொரு ட்வீட் ஒன்றை பாலாஜி வெளியிட்டு உள்ளார்.
அதில் “தமிழ்நாட்டில் குடியால் என்னைப்போலவே ஆதரவற்று நிற்பவர்கள் அதிகம். மதுவால் குடும்பத்தை இழந்தவர்கள் அதிகம். என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். உங்களால் கையாள முடியாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலாஜி முருகதாஸின் இந்த கருத்துகள் தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.