Bigg Boss போட்டியாளர் கைது... தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் பொலிஸார்!
நடைபெற்று வருகின்ற ' Bigg Boss கன்னட 10' நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
போட்டியாளர் கைது
வர்த்தூர் சந்தோஷ் என்பவர் வீட்டிற்குள் புலி நகம் பதக்கத்தை அணிந்திருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்த வனத்துறை அதிகாரிகள் ஷீட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று சந்தோஷை வெளியே அனுப்புமாறு ஊழியர்களிடம் கூறி, பதக்கத்தை சோதனை செய்தபோது, புலி நகம் என்பது உறுதியானது. பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு வர்த்தூரில் மாடுகளை விற்கும் தொழில் செய்து வரும் சந்தோஷ், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவரது சில வீடியோக்கள் வைரலான பிறகு அவர் சமூக ஊடகங்களில் வெற்றி பெற்றார். அதன் பின் தான் பிக்பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனலாம்.
புலி நகம் குறித்து சந்தோஷிடம் விசாரித்தபோது, அது தனது முன்னோர்களிடமிருந்து பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், வனவிலங்கு சட்டம், 1972 இன் கீழ், விலங்குகளின் பாகங்களை அணிவது அல்லது காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |