"புளிப்பா சாப்பிடனும் போல இருக்கு" : பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்! இனி நடக்க போவது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒரு பெண் போட்டியாளர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் 17
பிக் பாஸ் 17 தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகியுள்ளன. இந்நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.
வெளியே சென்ற 3 போட்டியாளர்கள் உள்ளே: பிரதீப் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்! பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு
இதுவரை இரண்டு வெளியேற்றங்களை மட்டுமே நடந்துள்ளது. சோனியா பன்சால் மற்றும் மானஸ்வி மம்கை ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஒரு பெண் போட்டியாளர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் போட்டியாளர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கிதா லோகாண்டே என்ற போட்டியாளர் தனது மாதவிடாய் காலத்தை தவறவிட்டதாகவும், கர்ப்ப பரிசோதனை செய்ததில், தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
புளிப்புச் சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டதாக நடிகை கூறியது போன்ற புதிய ப்ரோமோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டதிலிருந்து அனைவரின் மனதிலும் இந்த கேள்வியிருந்தது.
இதையடுத்து இவர் கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இவர் தோனி பட புகழ் சுஷாந்த் சிங் ராஜ்புட்டினின் முன்னாள் காதலி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |