பிக்பாஸ் பிரியங்காவுக்கு விவாகரத்தா? பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா தனது கணவரை விட்டு பிரிந்ததாக இணையதளத்தில் பேசப்பட்டு வருகின்றது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 கடந்த மாதம் முடிவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பிரியங்கா கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரியங்கா தனது கணவருடன் சண்டை போட்டு கோவித்து கொண்டு தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நடிகர் பயில்வான் கூறியதாவது, பிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் கடந்த சில மாதங்களாக சண்டை ஏற்பட்டு உள்ளதால் இருவரும் தனித்தனியே வாழ்கின்றனர்.
அதனால் தான் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிகே வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து பெற்றுக் கொண்டு தனித்தனியே செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இன்னமும் அவரது கணவரை பிரியங்கா பார்க்கவில்லை என்பது போன்று கூறியுள்ளார்.