மேக்கப் இல்லாமலும் பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா ஜொலிக்க இது தான் காரணமா? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூஸிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே பிரியங்கா.
பிரியங்காவும் மா.கா.பா ஆனந்தும் சேர்ந்து தொகுத்து வழங்கிய அனைத்து ரியாலிட்டி ஷோவும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். யார் கலாய்த்தாலும் சரி அதை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்பவர்.பிரியங்கா.
இவர் தற்போது பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துள்ளார். இந்நிலையில் இதுவரை பற்றி பலருக்கும் தெரியாத உண்மை முகங்கள் வெளியே வருகிறது. பெரும்பாலும் பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவை மேக்கப் இல்லாமல் அதிகம் பார்க்க முடிகிறது.
மேக்கப் இல்லாத நேரத்திலும் பிரியங்காவின் முகம் ஜொலிக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் தயிர். இந்த சீக்ரெட்டை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே பிரியங்கா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து இருக்கிறார். அந்த சீக்ரெட் பற்றி பார்க்கலாம் வாங்க..
- பிரியங்காவின் முக அழகுக்கு காரணம் தயிர் தானாம். 3 விதமாக தயிரையே முகத்திற்கு பிரியங்கா பயன்படுத்துவாராம். முதலில் தயிரை கொண்டு முகத்தை சுத்தமாக கழுவி எடுக்க வேண்டுமாம். அடுத்தது தயிருடன் காபி பொடியை சேர்த்து ஸ்கிரப் போல் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டுமாம்.
- அடுத்தது தயிருடன் தேனை சேர்த்து ஃபேஸ் மாஸ்க்காக முகத்தில் போட வேண்டுமாம். இந்த டிப்ஸ்களை சரியாக செய்து வந்தால் முகம் பளீச்சென்று மாறிவிடுமாம். இந்த டிப்ஸை நீங்களும் கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.