பிக்பாஸில் வரும் பணப்பெட்டி டாஸ்க் - வெளியே செல்லும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா?
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 8' நிகழ்ச்சியில் இறுதிக்கட்ட டாஸ்க்கான பணப்பெட்டி டாஸ்கில், யார் பணப்பெட்டியுடன் செல்வார் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.
Bigg Boss Season 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 8 தற்போது சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு மத்தியில் செல்கிறது.
குறித்த சீசனில் பல போட்டியாளர்கள் கலந்துக்கொண்டிருந்தாலும், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், செளந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
13 பேரில் ஒருவர் தான் கட்டாயம் வெற்றியாளராக முடியும். இவ்வாரத்தில் ரஞ்சித் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட டாஸ்க்கான பணப்பெட்டி டாஸ்க் நடைபெறவுள்ளது.
பணப்பெட்டியுடன் செல்லும் அந்த போட்டியாளர் யார்?
நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு மூன்று பேர் மட்டுமே தகுதிப் பெறுவார்கள். அதில் முதலிடம் பிடித்து வெற்றிப் பெறுபவருக்கு மாத்திரமே, டைட்டிலும், 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டி டாஸ் வரவிருக்கிறது.
இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கவின், கேப்ரியல்லா, அமுதவாணன், சிபி, பூர்ணிமா ஆகியோர் மட்டுமே பணப்பெட்டி டாஸ்கில் வெளியேறி உள்ளனர்.
அதிலும் கடந்த சீசனில் கலந்துகொண்ட பூர்ணிமா தான் அதிக தொகை உடன் வெளியேறினார். அவர் 16 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதேபோல் இந்த சீசனிலும் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுபோலவே வீட்டிற்குள் இருக்கும் ஒரு போட்டியாளருக்கும் அந்த எதிர்பார்பு இருக்கிறது.
அவர் வேறுயாருமில்லை ஜெப்ரி தான். கடந்த சில வாரங்களாக விஜய் சேதுபதி வரும் எபிசோடில் ஜெப்ரி நல்ல பெயர் வாங்காமல் இருப்பதாலும், சில தினங்களுக்கு முன் ரஞ்சித்திடம் மணி டாஸ்க் எப்போ வரும் என்றும் கேட்டுள்ளார்.
எனவே இதில் ஜெப்ரி பணப்பெட்டியுடன் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ராணவ் நேற்று நடந்த போட்டியின் மூலம் கை உடைந்து இருப்பதால், மூன்று வாரத்திற்கு முழு ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் வைத்தியர் கூறியதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
எனவே தற்போது ராணவும் கை உடைந்து இருப்பதால் அவரும் பணப்பெட்டிக்காக போட்டியிட வாய்ப்புள்ளது. யார் எடுத்து செல்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |