திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக் பாஸ் ராணவ் - நடந்தது என்ன?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 8' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர் ராணவ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Bigg Boss Season 8
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 8வது சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகரன், சச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா SK, தீபக், RJ ஆனந்தி, சுனிதா கோகோய், VJ விஷால், Jeffry, ரஞ்சித், முத்துக்குமரன், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், சௌந்தரியா நஞ்சுண்டன், அருண் பிரசாத், ஆர்ணவ் மற்றும் அன்ஷிதா அக்பர்ஷா போன்றோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
அதையடுத்து 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு நுழைவு மூலம் வீட்டிற்குள் வந்தனர்.
அதில் ஒருவரான ரானவ் தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணவ்
இவ்வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், பவித்ராவிடம் இருக்கும் கற்களை எடுக்க வரும் போது, Jeffry ரானவை தள்ளியுள்ளார். இதனால் கை அடிப்பட்டு, வலியில் துடித்துள்ளார்.
இதை பார்த்த ஏனைய போட்டியாளர்கள், அவர் நடிக்கிறார் என கூறியுள்ளனர். ஆனால் அருண் அவரை பிக் பாஸ் அறைக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னரே ராணவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிக் பாஸ் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |