Bigg Boss Season 8: யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? வெளியான தகவல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 -வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
கடந்த 6 -ம் திகதி முதல் Bigg Boss Season 8 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், முதல் 24 மணி நேரத்திலேயே போட்டியாளர் சாச்சனா வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சீசனை விட இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
இந்த சீசனில் போட்டியாளர்களாக இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் சம்பளம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது, இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.50,000 வரை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, மற்ற போட்டியாளர்களான நடிகர் தீபக் மற்றும் சாச்சனா ஆகிய இருவருக்கும் ரூ.30,000 என்று சொல்லப்படுகிறது.
அதேபோல, விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களான அருண், அர்னவ், சத்யா, வி.ஜே விஷால், ஜாக்குலின், பவித்ரா ஜனனி, சுனிதா, அன்ஷிதா, தர்ஷா குப்தா, தர்ஷிகா ஆகியோருக்கான சம்பளம் ரூ.20,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, முத்துக்குமார், ஜெப்ரி மற்றும் சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்குகிறார்கள் என்றும் தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |