Bigg Boss 9: இந்தவாரம் வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள்.., யார் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த 8ஆவது சீசன் முதல் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கி சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்நிலையில், போட்டியாளர்கள் ஆட்டத்தை மாற்றுவதற்காக கடந்த வாரம் வைல்டு கார்ட் போட்டியாளர்களை களமிறக்கியுள்ளனர்.

மேலும், இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்களும் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், ஐந்தாவது வாரமான இந்த வாரத்தில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு அடிப்படியில் ரம்யா கடைசியில் இருப்பதால், நாளைய எபிசோட்டில் அவர் வெளியேறுவார் என்ற தகவல் வெளியானது.

மேலும், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் FJ வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.
வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றதால் ஆட்களை குறைக்கும் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |