Bigg Boss 9: தர்பூசணி திவாகரை அடிக்க பாய்ந்த சக போட்டியாளர்.., நடந்தது என்ன?
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அறிமுக நாளில் போட்டியாளர்கள் தேர்வு செய்த சிவப்பு, நீலம் பேட்ச் அடிப்படையில் போட்டியாளர்கள் இரண்டு குழுவாகப் பிரிக்கப்பட்டனர்.
சிகப்பு பேட்ச் எடுத்த 13 போட்டியாளர்கள் சாதாரண ஹவுஸ் மேட்ஸாகவும், நீல பேட்ச் எடுத்த 7 போட்டியாளர்கள் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ் மேட்ஸாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் போட்டியாளர்களுக்கு சில சாதகங்களும் அடங்கியுள்ளன.
முதல் நாள் காலை பிக்பாஸ் பாடலை போட்டு துவங்கும் முன் போட்டியாளர் திவாகரும், பிரவீனும் தங்களில் யார் பெரிய குறட்டை என சண்டை போட்டுக்கொண்டனர்.
இந்த சமயத்தில் மற்ற போட்டியாளர்களும் சேர்ந்து திவாகரை பிசியோதெரபிஸ்ட் டாக்டரா என்று கேள்வி எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் முதல் நாளே வைத்த நாமினேஷனில் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தர்பூசணி திவாகரும், ரம்யாஜோவும் சண்டை போட்டுக்கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |