அடுத்த மாதம் தொடங்கப்போகும் பிக்பாஸ் சீசன் 9.., தொகுப்பாளர் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், கடந்த சீசனை தொகுத்துவழங்க முடியாது என்று கூறி அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, கடந்த 8ஆவது சீசனில் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கினார்.
கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவிருப்பதாக ஜியோஸ்டார் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சீசனையும் அவரே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 9ஆவது சீசனின் தொடக்கவிழா, அக்டோபர் முதல் வாரத்தில், மாலை 6 மணி முதல் விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
இந்த முறை, புதிய விதிகள், புதிய ஆட்டம் என்ற டேக்லைனுடன் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.
இந்த சீசனில், கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் சினிமா, சின்னத்திரை, சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிலிருந்து சிலர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |