பிக்பாஸில் குறைவான சம்பளத்தை பெற்ற முத்து.., Finalist 5 பேரின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் தமிழ் 8 கலந்துக்கொண்டு, இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்த 5 போட்டியாளர்களின் சம்பளமும் வெளியாகியுள்ளது.
Bigg Boss Season 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 8 சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு மத்தியில் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து, வெற்றியாளரையும் தேர்ந்தெடுத்துள்ளது.
குறித்த சீசனில் முத்து, ராயன், சௌந்தரியா, விஷால் மற்றும் பவித்ரா மட்டுமே போட்டியாளர்களாக இறுதிக் கட்டத்தை நோக்கி சென்றனர்.
அதில் வெற்றியாளராக முத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Finalist 5 பேரின் சம்பளம்
முத்துக்குமரன் சம்பளம்
முத்துக்குமரனுக்கு ஒரு நாளைக்கு ரூ.10,000 சம்பளம் வாங்கி இருக்கிறார். இவர் தான் பிக் பாஸ் வீட்டில் குறைவான சம்பளம் பெற்றவர் ஆவார். அவர் மொத்தமாக பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படவிருக்கிறது. அதோடு அவர் டைட்டில் வின்னர் ஆனதால் 40 லட்சத்து ஐம்பதாயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணப்பெட்டி போட்டியில் வென்ற 50,000 கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ராயன் சம்பளம்
இவருக்கு குறைவான சம்பளம் தான் கிடைத்திருக்கிறது. முத்துக்குமரனுக்கு அடுத்ததாக இவர்தான் குறைவான சம்பளம் வாங்கி இருக்கிறார். இந்த வீட்டில் 77 நாட்கள் இருந்திருக்கிறார். அதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 வீதம் 9 லட்சத்து 24 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு பணப்பெட்டி டாஸ்க் வென்ற இரண்டு லட்சமும் சேர்த்து வழங்கப்படும்.
சௌந்தர்யா சம்பளம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சியில் ரன்னராக இடம் பிடித்த சவுந்தர்யாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் மொத்தம் இந்த வீட்டில் 105 நாட்கள் தங்கி இருந்தார். அதற்கு 12 லட்சத்தில் 60 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
VJ விஷால் சம்பளம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னராக தேர்வாகியுள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 15,000 சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவர் மொத்தம் 105 நாட்கள் தங்கி இருந்த நிலையில் 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வாங்கியிருக்கிறார். அதோடு அவர் பணப்பெட்டி டாஸ்க்கில் 5 லட்சம் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த பணமும் அவருக்கு சேர்த்து கொடுக்கப்படுகிறது.
பவித்ரா ஜனனி
பவித்ரா பிக் பாஸ் 8 பைனல் லிஸ்ட்களில் அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பவித்ரா இருந்த 105 நாட்களுக்குள் சேர்ந்து 21 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதோடு 2 லட்சத்திற்கான பணப்பெட்டியையும் பவித்ரா வென்றிருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |