இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறிப்பு - பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது
bigg boss varshini venkat arrested for money cheating: இளைஞரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டதாக பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்ஷினி வெங்கட் கைது
பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் வர்ஷினி வெங்கட். சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்துள்ளார். சமீபகாலமாக தவெகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்.

தற்போது, இளைஞரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையின் கிண்டியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், கிண்டி காவல்நிலையத்தில் வர்ஷினி வெங்கட் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவில், குறும்படம் எடுக்க முதலீடு செய்யுமாறு பணம் பெற்றார். அதன் பின்னர் பணத்தை திருப்பி கேட்டபோது, ஆகஸ்ட் 22 ஆம் திகதி என்னை பேச அழைத்து, என்னை தாக்கி 2 செல்போன்கள் மற்றும் ரூ.50,000 பணம் பறித்தனர்.

பின்னர் தொலைபேசியில் மிரட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் ரூ. 5 லட்சம் பாய் பறித்தார். மேலும் ரூ.27 லட்சம் கேட்பதாகவும், தராவிட்டால் பொய் வழக்கு போடுவோம் என மிரட்டுகிறார்" என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வர்ஷினி வெங்கட் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேர் கைது செய்துள்ளனர். வர்ஷினி வெங்கட் தற்போது 7 நாட்கள் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.