பிக் பாஸ் வீட்டில் அடித்துக்கொள்ளும் தர்ஷிகா, சௌதர்யா - இந்த சீசனிலும் Red Card கொடுக்கப்படுமா?
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 8' நிகழ்ச்சியில் மீண்டும் Red Card கொடுத்து போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Bigg Boss Season
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 8 வது சீசனை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் போட்டியாளர்களாக ரவீந்தர் சந்திரசேகரன், சச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா SK, தீபக், RJ ஆனந்தி, சுனிதா கோகோய், Jeffry, ரஞ்சித், பவித்ரா ஜனனி, சௌந்தரியா நஞ்சுண்டன் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தார்கள்.
அதையடுத்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியானதையடுத்து தற்போது ரன்ஜித், அருன், சத்யா, முத்து குமரன், vj விஷால், ராணவ், சௌந்தர்யா, மஞ்சரி, ஆனந்தி, Jeffry,பவித்ரா ஜனனி, அன்சித்தா, தர்ஷிகா, ரயான், ஜெக்லின், சாச்சனா, தீபக் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது Angel மற்றும் Devil டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் தர்ஷிகா மற்றும் ஜெக்லின் இருவரிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Red Card கொடுக்கப்படுமா?
குறித்த வாக்குவாதத்தில், "இது உன் அப்பா வீடு இல்லை" என தர்ஷிகா ஜெக்லீனை பார்த்து கூறியுள்ளார். அதற்கு சௌந்தரியா நஞ்சுண்டன் தர்ஷிகாவிடம் வாக்குவாத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இருவர்களுக்கிடையிலான வாக்குவாதம் அதிகரிக்க சௌந்தரியா தர்ஷிகாவை தள்ளியுள்ளார். இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்வது போல் ப்ரோமா வெளியாகியுள்ளது.
அதை பார்த்த ரசிகர்கள் தற்போது இணையத்தில் "இந்த சீசனிலும் Red Card கொடுக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் சென்ற வாரத்தில் ராணவ் மற்றும் ரயான் சண்டையிலும் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்நிலையில் இந்த சண்டையும் ஆரம்பித்துள்ளதால் Red Card கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
7 ஆவது சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு Red Card கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |