Bigg Boss 9: ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பார்வதி, கம்ருதின்
பிக்பாஸ் 9வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெறுகிறது.
நேற்று நடத்தப்பட்ட ஒரு டாஸ்கில் கார் ஒன்று இருக்கும் அதில் அனைத்து போட்டியாளர்களும் இருக்க வேண்டும்.
யார் முடியாமல் இறங்கிவிடுகிறார்களோ அவர்கள் இந்த போட்டியை விட்டு வெளியேறிவிடுவதாக அர்த்தம் என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.

வீட்டில் உள்ள மொத்த போட்டியாளர்களும் காருக்குள் இருக்க விக்ரம் மட்டும் முதலில் இறங்கிவிடுகிறார்.
பிறகு ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சாண்ட்ராவை கம்ருதினும், பாருவும் சேர்ந்து காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிடுகின்றனர்.
இதில் போட்டியாளர் சாண்ட்ராவிற்கு பேனிக் அட்டாக் வந்துள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர்.

பார்வதி மற்றும் கம்ருதின் வன்முறையை கையாண்டதற்காக இணையத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், விஜய்சேதுபதி இவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. எனவே இவர்கள் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்படுவார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |