பிக்பாஸ் அமீரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? சிறுவனாக இருந்தபோதே கொல்லப்பட்ட தாய்.. பகீர் பின்னணி!
பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் சிறுவயது வாழ்க்கை பயணம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த வாரங்கள் வெளியேற உள்ளது யார்? வெற்றியாளர் யார்? என்பதையும் பிக்பாஸ் ரசிகர்கள் கணிக்க துவங்கிவிட்டனர்.
போட்டியாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் போட்டிகளும் கடுமையாகி கொண்டே செல்கிறது. மேலும் கடந்த 2 வாரங்களுக்கு முன் டான்ஸ் கோரியோ கிராப்பர் அமீர் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார்.
அமீர் டான்ஸ் கோரியோ கிராப்பர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இவரை பற்றி யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது அமீர் ஒரு வயது இருக்கும் போதே அவரது தந்தையை இழந்து விட்டாராம். இவரையும், இவரது சகோதரரையும் இவர் தாய் தான் வளர்த்து வந்துள்ளார்.
ஆனால் அமீருக்கு 10 வயது இருக்கும் போது யாரோ அவரது அம்மாவையும் கொலை செய்துவிட இவரும் இவருடைய சகோதரரும் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்துள்ளனர்.
சிறிய வயதில் இருந்தே நடனத்தின் மீது அமீருக்கு ஆர்வம் இருந்ததால் அவரது தாய் ஆசை படியே நடன இயக்குனராக மாறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.