பிக்பாஸ் ஜுலிக்கு திடீர் அறுவை சிகிச்சை! நடந்தது என்ன?
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜுலி திடீரென அறுவை சிகிச்சை நடந்ததாகவும், தற்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவரே இன்ஸ்டாவில் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் டூ பிக்பாஸ்
மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகத்திற்கு பரிட்சியமான முகமானார் ஜுலி, அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு ஏராளமான வெறுப்புகளையும் சம்பாதித்தார்.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஏராளமான நெகடிவ் கமெண்டுகள் குவிந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கான வேலைகளை கவனித்து வந்தார் ஜுலி.
தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்றார் ஜுலி.
ஜுலி தான் உண்மையான வெற்றியாளர் என்றாலும் ரசிகர்கள் கொண்டாடினர்.
திடீர் அறுவைசிகிச்சை
இந்நிலையில் ஜுலிக்கு Lasik surgery நடந்துள்ளதாக அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார், அந்த பதிவில், Lasik surgery வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது, என் கண்களின் ஆரோக்கியம் பற்றி கேள்வி எழுப்பிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
ஜுலியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விரைவில் மீண்டு வரவேண்டுமென பிரார்த்தனை செய்வதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.