பிக்பாஸ் கவினுக்கு திருமணம்! மணப்பெண் யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கனாகாணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகர் கவின், தொடர்ந்து தாயுமானவன் சீரியலில் நடித்தார்.
ஆனால் அவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது என்னவோ சரவணன் மீனாட்சி தொடர் தான்.
அந்த தொடரில் ரக்ஷிதா, கவினின் கெமிஸ்ட்ரி பலராலும் பேசப்பட்டது, தொடர்ந்து வெள்ளத்திரையில் கதாநாயகனாக களமிறங்கினார்.
முதல் படம் சொல்லிக்கொள்ளும் படியாக வெற்றி பெறவில்லை, அடுத்தடுத்து வாய்ப்புகளை தேடிய கவின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார்.
அங்கு இலங்கையை சேர்ந்த லொஸ்லியாவும் பங்கேற்க இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது.
ஆனாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பின்னர், அவர்களது காதல் கைகூடவில்லை.
தொடர்ந்து வெள்ளத்திரை பக்கம் கவனத்தை திருப்பிய கவினுக்கு லிப்ட், டாடா படங்கள் வெற்றியை கொடுத்தது.
தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், வீட்டில் பார்த்த பெண்ணுக்கு கவின் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நண்பர்கள், சொந்தபந்தங்கள் சூழ வருகிற 20ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |