பிக்பாஸ் வீட்டை விட்டு திருநங்கை நமீதா மாரிமுத்து வெளியேறியது உண்மை தான்! சுதா மம்மி விளக்கம்
பிக்பாஸ் வீட்டை விட்டு திருநங்கை நமீதா மாரிமுத்து ஏன் வெளியேறினார் என்பது குறித்து அவருடைய நெருங்கிய உறவினர் சுதா மாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்தி வழங்கி வரும் பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக திருநங்கை நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார்.
அதன் படி வீட்டில் சக போட்டியாளர்களுடன் இருந்து வந்த நமீதா, ஒரு எபிஸோடில் தன்னுடைய கடந்த கால கதையைப் பற்றி கூறினார். அதில், அவர் பேசியது, ஒட்டுமொத்த திருநங்கைக்காக பேசியது போன்று இருந்தது.
குறிப்பாக எங்கள் மீது அனுதாபப்பட வேண்டாம். எங்களுக்கு படிப்பை தாருங்கள் நாங்கள் முன்னேறி காட்டுவோம் என்று கூறியது, அங்கிருந்த போட்டியாளர்களை மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது.
இதன் மூலம் அவருக்கு சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.
இந்நிலையில், அவர் திடீரென்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அது உண்மையா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்த போது அவருடன் நெருக்கமாக இருக்கும் சுதா மம்மி என்பவர், இது உண்மை தான் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியது உண்மை தான். மருத்துவ காரணங்களால் தவிர்க்க முடியாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அதைத் தவிர தன்னால் ஒன்றும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.