CSK வீரரை திருமணம் செய்ய உள்ள பிக்பாஸ் பிரபலம் - யார் தெரியுமா?
தமிழ் பிக்பாஸ் பிரபலம், CSK வீரரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சம்யுக்தா
பிக்பாஸ் தமிழ் 4வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சம்யுக்தா.

இவர் 2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றுள்ளார். அதை தொடர்ந்து, சந்திரா குமாரி என்ற தமிழ் சின்னத்திரை தொடரில் ருத்ரா என்ற பாத்திரத்தில் நடித்தார்.
அதன் பின்னர், 2018 ஆம் ஆண்டில் ஓலு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில், தனுஷு ராசி நேயர்களே, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கார்த்திக் சங்கர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களில் துபாய் சென்ற அவரது கணவர் அதன் பின்னர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ராயன் என்ற மகன் உள்ளது.

சமீபத்தில், அவரது கணவரை விவாகரத்து செய்த இவர், தனது மகனை தன்னுடனே வளர்த்து வருகிறார்.
அனிருதா ஸ்ரீகாந்துடன் திருமணம்
இந்நிலையில், சம்யுக்தா 2வது திருமணம் செய்ய போவதை சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் CSK வீரரான அனிருதா ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அனிருதா ஸ்ரீகாந்த் 2008 முதல் 20174 வரை CSK அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக உள்ளார்.
இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவரும், தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் மகன் ஆவார்.
அனிருதா ஸ்ரீகாந்திற்கு ஆர்த்தி வெங்கடேசன் என்ற மொடலுடன் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |