Bigg Boss 9: இந்த வாரம் வெளியேறிய திவாகரின் சம்பளம்.., எத்தனை லட்சம் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த 8ஆவது சீசன் முதல் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கி சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கிவருகிறார்.
பலரும் நிகழ்ச்சியில் தரக்குறைவான வார்த்தைகளை பேசி வருகின்ற நிலையில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் ஒவ்வொருவாரமும் எச்சரித்து வருகின்றார்.

இந்நிலையில், பெண்கள் விஷயங்கள் அத்துமீறுதல் மற்றும் சாதி ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்துவதால் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட கனி வெளியேறியிருக்கிறார்.
இந்நிலையில் திவாகர், கனி ஆகிய இருவரும் பிக்பாஸில் எவ்வளவு சம்பாதித்துள்ளார்கள் என்று பார்க்கலாம்.

திவாகர் மொத்தம் பிக்பாஸ் வீட்டில் 40 நாட்கள் இருந்துள்ளார். அதன்படி ஒரு நாளைக்கு அவரது சம்பளம் 12 ஆயிரம் என கூறப்படுகிறது.
அதன்படி, மொத்தம் ரூ.5 லட்சம் வரை திவாகருக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, கனி 40 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியுள்ளார். அவருக்கு ரூ.4 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |