பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்படாது.., இனி இந்த சேனலில் பார்க்கலாம்
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், கடந்த சீசனை தன்னால் ஹோஸ்ட் செய்ய முடியாது என்று கூறி அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, கடந்த 8ஆவது சீசனில் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கினார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த சீசனோடு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் நடத்தப்பட்டாலும் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது என்றே கூறப்படுகிறது.
ஏனெனில் அண்மையில் விஜய் டிவியை அம்பானியின் ஜியோ நிறுவனம் வாங்கியது. இதனால் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் ஜியோ ஹாட்ஸ்டார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஏற்கனவே அம்பானிக்கு சொந்தமாக கலர்ஸ் என்கிற சேனல் உள்ள நிலையில், தற்போது விஜய் டிவியையும் அந்நிறுவனம் வாங்கி உள்ளதால், விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான படங்கள் இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளன.
இப்படி படங்கள் மட்டுமின்றி விஜய் டிவி நிகழ்ச்சிகளும் இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளன.
அந்தவகையில் அண்மையில் நிறைவடைந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி வருகிற பிப்ரவரி 23ஆம் தேதியில் இருந்து தினசரி இரவு 7 மணிக்கு பிக்பாஸ் 8 நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
அநேகமாக பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |