பிரித்தானிய வரலாற்றிலேயே மிகப்பெரிய மோசடி: நாடுகடத்தப்பட்ட மூவர்
Biggest fraud of britain gang deported: மோசடியில் சிக்கிய பல்கேரிய கும்பல் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டது.
53 மில்லியன் பவுண்டுகள் மோசடி செய்ததாக பல்கேரியாவைச் சேர்ந்த மூவர், பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
53.9 மில்லியன் பவுண்டுகள் மோசடி
பல்கேரியாவைச் சேர்ந்த ஸ்டோயன் ஸ்டோயனோவ், பாட்ரிட்சியா பனேவா மற்றும் கலினா நிகோலாவா ஆகியோர் பிரித்தானியாவில், 53.9 மில்லியன் பவுண்டுகள் மோசடியில் தங்களின் பங்களிப்பை ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் லண்டன் முழுவதும் மூன்று 'நலத்திட்டத் தொழிற்சாலைகளை அமைத்து, போலி சம்பள சீட்டுகள், வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், அத்துடன் வீட்டு உரிமையாளர்கள், முதலாளிகள் மற்றும் பொது மருத்துவர்களிடமிருந்து போலி கடிதங்களையும் தயாரித்து வந்தனர்.
இவ்வாறாக, ஆயிரக்கணக்கான போலி யுனிவர்சல் கிரெடிட் கோரிக்கைகளை உருவாக்கிய ஒரு குற்றக் கும்பலின் ஒரு பகுதியாக அவர்கள் இருந்தனர்.
இந்த கும்பலானது, 6000-க்கும் மேற்பட்ட அடையாளங்களை தவறாகப் பயன்படுத்தியதுடன், இந்த ஐந்தாண்டு கால மோசடியின் ஒரு பகுதியாக பல்கேரியாவில் வசிக்கும் குழந்தைகளின் பெயர்களையும் பயன்படுத்தியது தெரிய வந்தது.
அம்பலமான மோசடி
பல்கேரிய காவல்துறை அதிகாரி ஒருவர், ஸ்லிவன் நகரில் உள்ள குற்றவாளிகளுக்கு திடீரெனப் பெரும் தொகைகள் கிடைப்பது குறித்து, பிரித்தானிய அதிகாரிகளை எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்த கும்பலின் மோசடி அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் மூவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஐவர் கொண்ட இந்தக் கும்பலில் அலி மற்றும் டோடோரோவா ஆகிய இருவர் இன்னும் பிரித்தானியாவில் உள்ளனர். அவர்களை நாடு கடத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் வரை, அதிகாரிகள் இந்தக் கும்பலிடம் இருந்து சுமார் 1 மில்லியன் பவுண்டுகளை மீட்டுள்ளனர். ஆனால், இது அவர்கள் திருடிய 54 மில்லியன் டொலர்களில் சிறு பகுதி மட்டுமே. பிரித்தானிய வரலாற்றிலேயே மிகப்பெரிய நலத்திட்ட மோசடி இது என்று கூறப்படுகிறது.
