உலகம் இதுவரை கண்டிராத சம்பவம்... பிரித்தானியாவில் இந்த வாரம் முன்னெடுக்கப்படும்: வெளியான தகவல்
உலகம் இதுவரை கண்டிராத செவிலியர்களின் போராட்டமானது பிரித்தானியாவில் இந்த வாரம் முன்னெடுக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இரண்டாவது வெளிநடப்பு
எதிர்வரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையில் பல ஆயிரக்கணக்கான NHS ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட உள்ளனர். 30 நாட்கள் இடைவெளியில் நர்ஸ்கள் முன்னெடுக்கும் இரண்டாவது வெளிநடப்பு இதுவென கூறப்படுகிறது.
@PA
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 55 அமைப்புகளின் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்களைவிட 11 அமைப்புகள் கூடுதலாக கலந்துகொள்ள இருக்கிறது.
உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய செவிலியர்கள் போராட்டம் இதுவென ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் யூனியன் தெரிவித்துள்ளது. 106 ஆண்டு காலம் பழமையான ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் யூனியன் முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளது.
உடன்பாடு இல்லை
மேலும் தற்போதைய ஊதிய ஒப்பந்தத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், செவிலியர்களின் இந்த போராட்டமானது அப்பாவி மக்களை வெகுவாக பாதிக்கும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
@getty
இதனிடையே 1980களுக்கு பின்னர் பிரித்தானியா மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. ரயில் போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பிக்கும் சூழலும் உருவாகியுள்ளது.