பிரித்தானியாவின் புதிய AI அமைச்சராக இந்திய வம்சாவளி எம்.பி. நியமனம்
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லேபர் கட்சி எம்.பி. கனிஷ்கா நாராயண் செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிஷ்க நாராயண், 1989 நவம்பரில் பீஹாரின் முய்ஸாபர்பூர் நகரில் பிறந்தவர். 12 வயதில் குடும்பத்துடன் வேல்ஸ் மாநிலத்தின் கார்டிஃபுக்கு குடிபெயர்ந்தார்.

அங்கு கல்வி பயின்று, பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PPE (Philosophy, Politics, Economics) படித்தார். மேலும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் MBA முடித்துள்ளார்.
2024 பொதுத் தேர்தலில், அவர் வேல் ஆஃப் கிளாமார்கன் தொகுதியில் வெற்றி பெற்று, வேல்ஸ் மாநிலத்தில் முதல் இன சிறுபான்மை எம்.பி. ஆனார்.
2025-இல் AI மற்றும் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அமைச்சராக நியமிக்கப்பட்டு, இப்போது அமைச்சரவை நிலை AI அமைச்சராக உயர்த்தப்பட்டுள்ளார்.
The Prime Minister, @andyburnham, today asked me to attend Cabinet as Minister for AI, a sign of his deep commitment to AI's importance.
— Kanishka Narayan MP (@KanishkaNarayan) July 20, 2026
AI is likely the most significant technology in human history. Its impact will dwarf other things.
The best case for it is compelling beyond…
அரசியலுக்கு முன்பு, அவர் UK Cabinet Office-இல் சிவில் சர்வீசில் பணியாற்றியதுடன், தனியார் துறையிலும் நிதி ஆலோசகராக இருந்துள்ளார்.
சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்ட அவர், Attain Wales என்ற அமைப்பை நிறுவி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார்.
பிரித்தானியாவின் AI கொள்கை தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், Google DeepMind, ElevenLabs, Wayve போன்ற முன்னணி AI நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன.
இந்நிலையில், கனிஷ்கா நாராயண் தலைமையிலான புதிய AI அமைச்சகம், பிரித்தானியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |