UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மோசடி - பாராட்டியே பொலீசாரே கைது செய்தனர்

Bihar
By Karthikraja Mar 17, 2026 02:02 PM GMT
Report

UPSC தேர்வில் தேர்ச்சி பெறாமலே தேர்ச்சி பெற்றதாக ஒருவர் மோசடி செய்த நிலையில், அவரை பாராட்டியே பொலீசாரே அவரை கைது செய்துள்ளனர்.

UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மோசடி

2025 ஆம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்விசஸ் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானதில் நாடு முழுவதும் 958 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

பீகாரின் ஷேக்ஸ்புரா மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தான் இந்த தேர்வில் 440வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றதாக தெரிவித்துள்ளார். 

UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மோசடி - பாராட்டியே பொலீசாரே கைது செய்தனர் | Bihar Fake Upsc Winner Ranjith Arrested By Police

இதனையடுத்து அந்த கிராம மக்கள் அவரை கொண்டாட தொடங்கினர். கிராமத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த பகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சாம்ராட் அவருக்கு பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து கௌரவித்தார். மேலும், பரிசுபொருளும் வழங்கினார். 

6 வருடமாக புற்றுநோயுடன் போராட்டம் - தடையை மீறி UPSC தேர்வில் சாதித்த சஞ்சய்

6 வருடமாக புற்றுநோயுடன் போராட்டம் - தடையை மீறி UPSC தேர்வில் சாதித்த சஞ்சய்

மேலும் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மேற்கோள் காட்டியதோடு, மற்ற தேர்வர்கள் நாளொன்றுக்கு 18 மணி நேரம் படிக்கும்போது, ​​தான் எப்படி வெறும் 4 மணி நேரம் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றேன் என்பதையும் குறிப்பிட்டார்.

பாராட்டியே பொலீசாரே கைது செய்தனர்

மஹூலி காவல் நிலைய ஆய்வாளர் ராம்பிரவேஷ் பார்தி, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கௌரவித்தார். 

UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மோசடி - பாராட்டியே பொலீசாரே கைது செய்தனர் | Bihar Fake Upsc Winner Ranjith Arrested By Police

அதன் பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் UPSC தேர்ச்சி பட்டியலை சரிபார்த்த போது 440வது இடத்தை பிடித்தது பீகாரை சேர்ந்த ரஞ்சித் குமார் இல்லை, ​​கர்நாடகாவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ஆர் என்பது தெரிய வந்தது. 

7 முறை தோல்வி - 8 வது முயற்சியில் UPSC தேர்வில் சாதித்த நெசவாளியின் மகன்

7 முறை தோல்வி - 8 வது முயற்சியில் UPSC தேர்வில் சாதித்த நெசவாளியின் மகன்

இதனை உறுதிப்படுத்த அடையாள ஆவணங்களுடன் காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். அதன் பின்னர் அவர் தனது செல்போனை அணைத்து விட்டு மயமாகியுள்ளார். 

தற்போது அவருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்த காவல் ஆய்வாளர் ராம்பிரவேஷ் பார்தியே அவரை கைது செய்துள்ளார். 

bihar fake upsc winner ranjith arrested

இதே போல் மற்றொரு பீகார் பெண்ணும் தேர்ச்சி பெறாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளாகவும் அவரையும் கைது செய்ய வேண்டுமென சமூக ஊடக பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

செங்கல் சூளை தொழிலாளியின் மகன் - முதல் முயற்சியிலே UPSC தேர்வில் வெற்றி

செங்கல் சூளை தொழிலாளியின் மகன் - முதல் முயற்சியிலே UPSC தேர்வில் வெற்றி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US