ரயிலில் சமோசா விற்று நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வருமானம் - லண்டனில் அசத்தும் இந்தியர்
லண்டனில் சமோசா விற்கும் இந்தியர் ஒருவர் நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.
சமோசா விற்று நாளொன்றுக்கு ரூ.12 லட்சம்
பீகார் மாநிலத்தை சேர்ந்த Kalishaprasad Kishanlal Sha, என்பவர் 1972 ஆம் ஆண்டில், குஜராத்தின் நாடியாத்தில் சிறிய சமோசா கடை ஒன்றை தொடங்கினார்.

அதன் இனிமையான சுவை காரணமாக எந்த பெரிய சந்தைப்படுதலோ முதலீடோ இல்லாமல், அந்த சமோசா கடை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, அகமதாபாத், ஆனந்த் மற்றும் வதோதரா என குஜராத்தின் பல்வேறு நகரங்களில் கடைகள் திறக்கப்பட்டன.
இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிற்கு சமோசா தொழிலை விரிவுபடுத்த விரும்பிய அவரின் மகன்கள் லண்டனில் வெம்ப்லி மற்றும் சவுத் ஹாரோவிலும் பீஹாரி சமோசா என்ற பெயரில் தங்களது சமோசா கடையை திறந்தனர்.

அவர்களின் சமோசா கடைகளில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சமோசா வாங்கி சாப்பிடுகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் லண்டன் நகரின் முக்கிய வீதிகளில் ஷாவின் மகன் யோகேஷ்வர் ஷா வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டியுடன் சமோசா விற்கும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெகுவாக கவனம் பெற்றது.
ஒரு வீடியோவில், யோகேஷ்வர் ஷா நாளொன்றுக்கு சுமார் 10,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம்) சம்பாதிப்பதாக தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |