TVS XL போல இருக்கும் மூன்று சக்கர மின்சார வாகனம்.., விலை மற்றும் சிறப்பம்சங்கள்
ரிலோக்ஸ் இவி (Rilox EV) நிறுவனம் அறிமுகப்படுத்திய மூன்று சக்கர மின்சார வாகனத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மூன்று சக்கர மின்சார வாகனம்
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார வாகன (EV) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரிலோக்ஸ் இவி (Rilox EV), பிஜிலி ட்ரியோ (Bijli Trio) எனும் மூன்று சக்கரத்தில் இயங்கும் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் அறிமுக விலை ரூ.1.35 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இந்த வாகனத்தை தனிநபர் பயன்பாட்டிற்காக பயன்படுத்த முடியாது. சரக்குகளை ஏற்றி செல்வதற்கும், டெலிவரி சேவையை மையப்படுத்தியும் இந்த வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில், சுமார் 500 கிலோ எடை வரை பொருட்களை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த வாகனத்தை ஓர் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் முதல் 120 வரை பயணிக்க முடியும்.
அதோடு, 3 KW என்எம்சி (NMC) வகை பேட்டரி பேக், 1200W மோட்டார் உள்ளது. கூடுதலாக, 15 Tube Sin Wave Controller மற்றும் MCP (40 Amps rated) ஆகியவை சிறந்த பேட்டரி பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |