கமலா ஹாரிஸ் எங்கள் பிரச்சனைகளை தீர்க்க பணியாற்றுவார்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
அமெரிக்கர்களின் பிரச்சனைகளை தீர்க்க கமலா ஹாரிஸ் பணியாற்றுவார் என முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கூறியுள்ளார்.
வேட்பாளர் கமலா ஹாரிஸ்
நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் (Donald Trump), ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிடுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (Bill Clinton) ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) மற்றும் துணை ஜனாதிபதி டிம் வால்ஸ் ஆகியோரை ஆதரித்து சிகாகோ மாநாட்டில் பேசியுள்ளார்.
டொனால்டு டிரம்பை விட நான் இன்னும் இளையவன்
அவர் கூறுகையில், "இரண்டு நாட்களுக்கு முன்பு நான் 78 வயதை அடைந்தேன். நான்கு தலைமுறைகளாக என் குடும்பத்தில் மூத்த மனிதர் நான். டொனால்டு டிரம்பை விட நான் இன்னும் இளையவன் என்பது தான் நான் வலியுறுத்த விரும்பும் ஒரே தனிப்பட்ட மாயை" என்றார்.
மேலும் கமலா ஹாரிஸ் குறித்து அவர் கூறுகையில், "கமலா ஹாரிஸ் எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கவும், எங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், எங்கள் அச்சத்தை எளிதாக்கவும், ஒவ்வொரு அமெரிக்கரும், அவர்கள் வாக்களித்தாலும் அவர்களின் கனவுகளைத் துரத்துவதற்கான வாய்ப்பை உறுதிசெய்யவும் பணியாற்றுவார்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |