நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? 2027 ஆம் ஆண்டுக்குள் பொறுப்பேற்க கெடு
நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா?
நேட்டோ(NATO) என்பது அதன் உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நாடுகளுக்கு இடையிலான இராணுவக் கூட்டணியாகும்.

நேட்டோ உறுப்பு நாட்டின் மீது ஒரு நாடு தாக்குதல் நடத்தினால், மற்ற நாடுகள் உதவ வேண்டும். நேட்டோவில் 30 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா உட்பட இரு தென் அமெரிக்க நாடுகள் என 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது.
இந்நிலையில், நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என்ற மசோதாவை பிரதிநி தாமஸ் மாஸி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த மசோதாவில், "நேட்டோ ஒரு பனிப்போர் நினைவுச்சின்னம். நாம் நேட்டோவிலிருந்து விலகி, அந்த பணத்தை சோசலிச நாடுகளுக்கு பயன்படுத்தாமல், நமது சொந்த நாட்டைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், "30 ஆண்டுகளுக்கு முன்பு சரிந்த சோவியத் யூனியனை எதிர்கொள்ள நேட்டோ உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து, அமெரிக்க பங்கேற்பு வரி செலுத்துவோருக்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்துள்ளது மற்றும் வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா ஈடுபடும் அபாயத்தைத் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பை வழங்க போதுமான பொருளாதார மற்றும் இராணுவ திறனைக் கொண்டுள்ளனர் என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது. நேட்டோவின் அசல் பனிப்போர் நோக்கம் இனி தற்போதைய அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்களுடன் ஒத்துப்போகவில்லை என்று முடிவு செய்கிறது.
எனவே நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 13 இன் கீழ் அமெரிக்கா விலகுவதை நேட்டோவிற்கு முறையாக அறிவிக்க அமெரிக்க ஜனாதிபதியை இந்த மசோதா கோருகிறது.
முன்னதாக, ஐரோப்பிய நட்பு நாடுகள் நேட்டோவிற்கு அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் பலமுறை வாதிட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு கெடு
2027 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, உளவு, ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நேட்டோவின் பாதுகாப்பு கடமைகளை ஐரோப்பா ஏற்க வேண்டும் என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா 2027 ஆம் ஆண்டிற்கு முன்னதாக இந்த இலக்கை அடையத் தவறினால், அமெரிக்கா சில நேட்டோ பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகளிலிருந்து விலகக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் 2030 ஆம் ஆண்டுக்குள் கண்டத்தை தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |