மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தாம் குவித்து வைத்திருக்கும் மிகப்பெரிய சொத்தின் பெரும்பகுதியை தனது மூன்று பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
சாதகமாக வேண்டாம்
தனது சொத்தை நம்புவதற்குப் பதிலாக, தனது பிள்ளைகள் தங்கள் சொந்த முயற்சியால் வெற்றியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கேட்ஸ் கூறியுள்ளார். என் குழந்தைகளுக்கு சிறந்த வளர்ப்பும் கல்வியும் கிடைத்தது, ஆனால் மொத்த சொத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே அவர்களுக்கு கிடைக்கும்,
ஏனெனில் எனது சொத்துக்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன் என்பதையும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வழி நடத்தவும் நான் அவர்களை கோரவில்லை என்றார்.
பில் கேட்ஸின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 101.4 பில்லியன் அமெரிக்க டொலர். அதில் 1 சதவீதம் தொகையை ஜெனிஃபர் (28), ரோரி (25), மற்றும் ஃபோப் (22) ஆகிய மூன்று பிள்ளைகளுக்கும் பில் கேட்ஸ் பகிர்ந்தளிக்க இருக்கிறார்.
பாதுகாப்பற்றதாக
தனது பிள்ளைகள் தங்கள் சொந்த வருமானத்தையும் வெற்றியையும் பெறவும், எனது சொத்துக்களால் அவர்களின் உழைப்பு மறைக்கப்படாமல் இருக்க ஒரு வாய்ப்பை நான் அவர்களுக்கு வழங்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸின் இளைய மகள் ஃபோப் கேட்ஸ் தெரிவிக்கையில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தாம் பில் கேட்ஸின் மகள் என்பதாலையே பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மனித உயிரியலில் பட்டம் பெற்றுள்ள ஃபோப் கேட்ஸ், தற்போது தனது ஃபேஷன் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஃபியாவில் பணிபுரிகிறார். வணிகத்தில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கு முன்பு, பட்டப்படிப்பை முடிப்பதில் தனது பெற்றோர் உறுதியாக இருந்ததாக ஃபோப் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |