உலகின் பெரும் கோடீஸ்வரராக வலம் வந்தவர்... இன்று கடைசி வரிசையில் ஒருவராக
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில் முதலிடத்தில் நிலையாக இருந்தவர் மைக்ரோசாப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ்.
சரிவுக்குப் பின்னால்
இன்று, முதல் 10 இடங்களில் கடைசியாக பில் கேட்ஸின் பெயர் இடம்பெற்றுள்ளது. தற்போதைய அவரது சொத்து மதிப்பு 103.8 பில்லியன் அமெரிக்க டொலராகும். 1990 காலகட்டத்தில் இருந்தே உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருபவர் பில் கேட்ஸ்.
பெரும்பாலும் அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர் அல்லது இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்று வந்துள்ளார். ஆனால் பட்டியலில் இருந்து அவரது வீழ்ச்சி குறிப்பிடத்தக்கது மற்றும் அவரது சரிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களும் கவனிக்கத்தக்கது.
கேட்ஸின் தரவரிசை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம், 2021 ஆம் ஆண்டு மெலிண்டா கேட்ஸிடமிருந்து அவர் விவாகரத்து செய்ததாகும். ஆரம்ப மதிப்பீடுகளை விட அவர் அளித்த தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, இதனால் கேட்ஸின் சொத்து மதிப்பில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு
மெலிண்டா கேட்ஸ் தற்போது அமெரிக்காவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 29 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
அவரது சொத்து மதிப்பு குறைந்த போதிலும், கேட்ஸின் அறக்கட்டளை மீதான அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, உலகளாவிய சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் தனது பணிகளைத் தொடர்கிறது.
தற்போது கேட்ஸ் மற்றும் மெலிண்டாவும் தனியாக முயற்சிகளைத் தொடர்ந்தாலும், தங்களது அறக்கட்டளை குறைந்தது 25 ஆண்டுகளுக்குச் செயல்பாட்டில் இருக்கும் என்று கேட்ஸ் உறுதியளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |