கொசுக்களை தயாரிக்கும் பில்கேட்ஸ் நிறுவனம்! எதற்காக தெரியுமா?
பில்கேட்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஆக்ஸிடெக் என்ற ஆய்வகம் பெரிய கொசுக்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
இந்த கொசுக்களால் நோய்களை பரப்பாமல் பலன்கள் அள்ளிக்கொடுக்குமாம்.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களுக்கு 6,00,000 ற்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.
எனவே கொசுக்களின் உற்பத்தியை குறைக்க ராட்சத கொசுக்களை உருவாக்கி வருகிறது ஆக்ஸிடெக்.
இதில் உள்ள சிறப்பு வகை மரபணுவானது, மற்ற கொசுக்களின் இனப்பெருக்கத்தை நிறுத்தும்.
இவை அனைத்தும் ஆண் கொசுக்கள் தான், இந்த கொசுக்கள் மற்ற பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்தால் பெண் கொசு இறந்துவிடும். இதனால் கொசுக்களின் உற்பத்தி விகிதம் குறையும்.
இந்த கொசுவை யார்வேண்டுமானாலும் வாங்கலாம். கொசுக்களை வாங்கி உங்கள் பகுதியில் விடுவதால் கொசுக்களின் இனப்பெருக்கம் வெகுவாக குறையும் என்பதுடன் நோய் விகிதம் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |