AI தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு - பில்கேட்ஸ்
bill gates about opportunities for india in ai: AI தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
AI குறித்த அச்சம்
செயற்கை நுண்ணறிவு துறை அனைத்து பெரும்பாலான துறைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும், அதன் அதீத வளர்ச்சி வேகம் குறித்து செயற்கை நுண்ணறிவு நிபுணர்களே கவலை தெரிவித்துள்ளனர்.
முன்னணி AI நிறுவனங்களான Open AI மற்றும் gemini ஆகியவற்றில் பணியாற்றிய ஆய்வாளர்கள் AI எதிர்காலத்தில் மனித குலத்தை அழிக்க கூடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், AI மனிதர்களின் கட்டுப்பாடின்றி அரசின் தளங்களில் ஊடுறுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
Open AI ஏஜென்ட், முன்னதாக அவுஸ்திரேலிய அரசின் Medicare தளத்தையும், அமெரிக்க அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) அமைப்புகளின் இணையதளங்களையும் ஊடுருவியதாக Open AI தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு
இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸும், AI தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "மனிதகுலம் முழுவதையும், அதாவது 100 சதவீதம் அழிப்பது ஒப்பீட்டளவில் கடினம் என்றாலும், தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதன் கூட்டு விளைவைப் போல சக்தி வாய்ந்த ஆயுதம் இதற்கு முன் இருந்ததில்லை.
AI தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால், ஒரே நிகழ்வில் சுமார் 100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது.
எனவே, இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த AI நிறுவனங்கள் தாங்களாகவே மேற்கொள்ளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இருக்காது. அரசுகள் கடுமையான விதிகளைக் கொண்டுவர வேண்டும்.
ஏஐ தொடர்பாக அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் எடுக்கப்படும் முடிவுகள், இந்தத் தொழில்நுட்பத்தால் யார் பயனடைவார்கள் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்த தொழில்நுட்பத்தின் பலன்களை நகரங்களுக்கு மட்டுமல்லாது, கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இதற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.
ஏஐ தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் மட்டும் இல்லாமல், உள்ளூர் மொழிகள், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுத் திறமைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic தலைவர் தாரியோ அமோடே ஆகியோர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும் போது, "சர்வதேச அளவில் AI பாதுகாப்பு விதிகளை வகுக்க அமெரிக்கா தலைமைத் தாங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் AI குறித்த பாதுகாப்பு அச்சங்களை போலிப் பிரசாரம் என்று விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்த கட்டுப்பாடுகள் AI துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என குறிப்பிட்டுள்ளார்.