கனடாவுக்கு புதிய துணை பாதுகாப்பு அமைச்சர் நியமனம்! வாழ்த்திய பாதுகாப்பு அமைச்சரான தமிழ்ப்பெண்
கனடாவில் துணை பாதுகாப்புத்துறை அமைச்சராக பில் மேத்யூஸ் நியமிக்கப்படவுள்ளார்.
இதையடுத்து அவருக்கு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரான தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பில் மேத்யூஸ் தற்போது துணை பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் அவரை துணை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வரும் 11ஆம் திகதி முதல் அதிகாரபூர்வமாக பில் மேத்யூஸ் கனடாவின் துணை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பார்.
இந்த நிலையில் பில் மேத்யூஸுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவரின் டுவிட்டர் பதிவில், பில் மேத்யூஸ் தேசிய பாதுகாப்பு துணை அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்து வரவேற்கிறேன்.
பில் கனடியர்களுக்கான சிக்கலான கோப்புகளை நிர்வகிப்பதில் நிபுணத்துவம் பெற்ற, உயர்ந்த வரிசையின் ஒரு பொது ஊழியர். மீண்டும் ஒருமுறை அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
I also congratulate and welcome Bill Matthews on his appointment as Deputy Minister of National Defence. Bill is a public servant of the highest order, with expertise managing complex files for Canadians. I look forward to working together once again! pic.twitter.com/FwMy4D0FSn
— Anita Anand (@AnitaAnandMP) January 5, 2022