எங்கள் சொத்துக்களுக்கு பிள்ளைகள் வாரிசு கிடையாது! அறிவித்த அவுஸ்திரேலியாவின் 2வது கோடீஸ்வர தம்பதி
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த தம்பதி தங்களின் $25 பில்லியன் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு தந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் சொத்துக்களுக்கு தங்களது பிள்ளைகள் வாரிசாக இருக்க மாட்டார்கள் என்று தம்பதிகள் அறிவித்துள்ளனர்.
ஆண்ட்ரூ ட்விக்கி மற்றும் நிகோலா பாரஸ்ட் தம்பதி அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். இவர்களின் குடும்பம் தான் அந்நாட்டின் 2வது பணக்கார குடும்பம் ஆகும்.
அவர்களது சொத்து உள்நாட்டு ஆதரவு, கல்வி மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிக்கோலா கூறுகையில், எங்களின் பிள்ளைகளான கிரேஸ், சோபியா, சிட்னி ஆகியோர் இவ்வளவு பெரிய செல்வத்தால் சுமையுடன் வாழ விரும்பவில்லை. நாங்கள் ஒரு வீட்டில் வாழ்கிறோம். எனக்கு ஒரு சிறந்த வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன.
அதை பணத்தால் வாங்க முடியாது. பிள்ளைகள் பெரும் தொகையை மரபுரிமையாக பெறப்போகிறோம் என்று நினைப்பதால் பயனில்லை என கூறியுள்ளார்.
ஆண்ட்ரூ ட்விக்கி கூறுகையில், தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் பொருட்களை தவிர எல்லாவற்றையும் கொடுக்கும் முடிவு எளிதானது. நாம் செல்வந்தராக சாகக்கூடாது அதனால் என்ன பயன்? என தெரிவித்துள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவை இந்த தம்பதிக்கு சொத்தில் பெரும்பகுதி mining தொழிலில் இருந்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.