பெரும் கோடீஸ்வரரின் மகள்... லண்டனில் பட்டப்படிப்பு: அவரது தற்போதைய நிலை
Max India Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் தாரா சிங் வச்சானி, இந்தியாவில் நன்கு அறியப்படும் பெண் தொழிலதிபர்களில் ஒருவர்.
சொத்து மதிப்பு ரூ 10,078 கோடி
மேக்ஸ் குழுமத்தின் தலைவரான பெரும் கோடீஸ்வரர் Analjit Singh என்பவரின் மகள் தான் இந்த தாரா சிங். மேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 1297 கோடி.
மேக்ஸ் இந்தியா குழுமத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அனல்ஜித் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு ரூ 10,078 கோடி. தாரா சிங் Antara என்ற நிறுவனத்தின் நிறுவனராக இருந்தாலும், மேக்ஸ் இந்தியா அறக்கட்டளையிலும் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்தியாவில் முதியவர்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் கவனிப்பு தொடர்பில் திட்டமொன்றை வகுத்துள்ள தாரா சிங், அதன் அடிப்படையில் குடியிருப்பு வளாகம் ஒன்றை இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கியுள்ளார்.
லண்டன் மற்றும் சிங்கப்பூரில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் முடித்தவர் தாரா சிங். சாஹில் வச்சானி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சாஹில் தற்போது மேக்ஸ் குழுமத்தின் மேக்ஸ் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் தலைவராகவும் உள்ளார். சாஹில் - தாரா தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |