பெரும் கோடீஸ்வரரின் பேரப்பிள்ளை... சூப்பர் ஸ்டார் ஒருவருடன் திருமணம்: யாரிந்த உபாசனா
இந்தியாவில் பல பெண்கள் தங்கள் குடும்பத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனை
அப்படியான ஒருவர் உபாசனா காமினேனி கொனிடேலா. மூன்றாவது தலைமுறை தொழிலதிபரான இவர் அப்பல்லோ மருத்துவமனைகள் குடும்பத்து உறுப்பினர்.
அப்பல்லோ மருத்துவமனையை நிறுவிய கோடீஸ்வரர் பிரதாப் ரெட்டியின் பேத்தி இவர். CSR அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 98,320 கோடி. 34 வயதான உபாசனா அப்பல்லோ மருத்துவமனைகளில் குறிப்பிடத்தக்க சமூக முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார், இரக்கம் மற்றும் கண்ணியத்துடன் ஆரோக்கியத்தையும் வலியுறுத்துகிறார்.
ராம் சரண் மனைவி
இவரது தாயார் சோபனா அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவராக உள்ளார். URLife என்ற நிறுவனத்தை நிறுவிய உபாசனா, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2012ல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் இவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு க்ளின் காரா என்ற மகள் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |