இரண்டே நாட்களில்... முகேஷ் அம்பானியை முந்தி பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை தட்டித் தூக்கிய நபர்
ஆசியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சறுக்கியுள்ளார்.
இரண்டே நாளில்
சுமார் 111 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துமதிப்புடன் 11வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, ஸ்பெயின் நாட்டின் தொழிலதிபர் ஒருவரிடம் இரண்டே நாளில் தமது இடத்தை இழந்துள்ளார்.
ஸ்பெயின் தொழிலதிபரான Amancio Ortega தற்போது 113 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான Inditex-ல் 59 சதவிகித பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் Amancio Ortega.
உலகம் முழுக்க Inditex நிறுவனத்தின் 7,400 கடைகள் செயல்பட்டு வருகிறது. Inditex நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது 34.1 பில்லியன் டொலர் தொகையை தாண்டியுள்ளது.
டெலிவரி பாயாக
ஆடம்பரப் பொருட்களின் விற்பனையை முன்னெடுத்துவரும் Inditex நிறுவனம், பல்வேறு இதர தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறது. Amancio Ortega-வின் தொழில் வளர்ச்சி என்பது ஸ்பெயின் நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முதன்மையான நாடுகளிலும் தடம் பதித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தற்போது இடம்பெற்றிருந்தாலும், தொடக்கத்தில் டெலிவரி பாயாகவே பிழைப்பை தொடங்கியுள்ளார். இவரது தந்தை ஸ்பெயின் ரயில் நிர்வாகத்தில் சாதாரண ஊழியராக பணியாற்றியவர்.
தொடக்கத்தில் சின்னதாய் ஒரு கடை தொடங்கிய Amancio Ortega, படிப்படியாக அதை விரிவாக்கம் செய்துள்ளார். 1975ல் தனது முதல் விற்பனை நிலையமான ZARA-வை துவங்கியுள்ளார். 1985ல் Inditex நிறுவனத்தை துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |