பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் மகள்... பெற்றோரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ 52,000 கோடி: யாரிவர்
TVS குழுமத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், தனக்கான பாதையை உருவாக்கி, இந்திய வணிகத்தில் ஒரு வல்லமைமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளார் லட்சுமி வேணு.
மிகவும் செல்வாக்கு மிக்க
இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழில்துறை குடும்பங்களில் ஒன்றில் பிறந்த லட்சுமி, நவீன தலைமைத்துவம் மற்றும் புதுமையின் அடையாளமாக மாறியுள்ளார்.
லட்சுமி வேணு 2010ல் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் (SCL)ல் இணை நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். புகழ்பெற்ற TVS குழுமத்தின் கீழ் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் முக்கிய உற்பத்தியாளராக திகழ்கிறது SCL.
பொறுப்புக்கு வந்ததில் இருந்து, SCLன் உலகளாவிய வாய்ப்பை விரிவுபடுத்துவதற்கும், புதிய சந்தைகள் மற்றும் வாய்ப்புகளை நோக்கி நிறுவனத்தை வழிநடத்துவதற்கும் லட்சுமி முக்கியப் பங்காற்றினார்.
யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற லட்சுமி, அந்த அனுபவத்தை நிர்வாகத்தில் செயல்படுத்தினார்.
SCL நிறுவனத்தில் தனது பங்களிப்பைத் தவிர கூடுதலாக TAFE மோட்டார்ஸ் மற்றும் டிராக்டர்ஸ் லிமிடெட்டின் துணை நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார். லக்ஷ்மி வேணு இந்தியாவின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஆழமாக வேரூன்றிய குடும்பத்திலிருந்து வந்தவர்.
ரூ 52,000 கோடிக்கும் அதிகம்
இவரது தந்தை, வேணு சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவராக உள்ளார், இதன் நிகர மதிப்பு ரூ 29,072 கோடி. இவரது தாயார், மல்லிகா சீனிவாசன், டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE)க்கு தலைமை தாங்குகிறார், இதன் நிகர மதிப்பு ரூ 23,625 கோடி.
லட்சுமியின் பெற்றோர்கள் சேர்ந்து ரூ 52,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். லக்ஷ்மி வேணு, புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரும், சுதந்திரக் கட்சியின் தலைவரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான என்.ஜி. ரங்காவின் கொள்ளுப் பேரன் மகேஷ் கோகினேனியை மணந்தார்.
சுகுணா மற்றும் டாக்டர் கமலேந்திர கோகினேனியின் மகனான மகேஷ், லட்சுமியின் சொந்தப் பரம்பரையில் இருந்து வந்தவர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |