நடிகர் ஷாருக் கானின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்.... அவரது சொத்து மதிப்பு ரூ 1.4 லட்சம் கோடி: யார் அந்த நபர்
இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக் கானின் அண்டை வீட்டில் வசிப்பவர் பெரும் கோடீஸ்வரர் மட்டுமின்றி அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்.
சொந்தமாக குடியிருப்பு
நடிகர் ஷாருக் கானுக்கு மும்பை மாநகரில் மட்டுமின்றி, ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திலும் சொந்தமாக குடியிருப்பு உள்ளது. துபாய் மாகாணத்தில் உள்ள அவரது குடியிருப்புக்கு அண்டை வீட்டில் வசிப்பவர் வேறு யாருமல்ல, துபாய் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் என்பவரே.
துபாய் அரசாங்கத்திற்கு சொந்தமான Nakheel என்ற நிறுவனம் சார்பில் குடியிருப்பு ஒன்றை நடிகர் ஷாருக் கானுக்கு சொந்தமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் தான் அவர் துபாய் செல்லும் போது தங்குவது வழக்கம்.
அந்த குடியிருப்புக்கு அருகாமையில் தான் துபாய் பிரதமருக்கும் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில் துபாய் ஆட்சியாளரான அல் மக்தூம் என்பவரின் சொத்து மதிப்பு சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் என்றே கூறப்படுகிறது.
119.8 பில்லியன் அமெரிக்க டொலர்
கட்டுமான நிறுவனங்களில் இருந்தே, இவர் பெருந்தொகை வருவாய் ஈட்டுகிறார். மட்டுமின்றி, துபாய் மாகாணத்தை சர்வதேச நகரமாக மாற்றிய பெருமையும் இவரையே சாரும்.
துபாய் அரசாங்கத்திற்கு சொந்தமான எமிரேட்ஸ் குழுமத்தின் 2022 - 2023 வருவாய் என்பது 119.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. Burj Dubai என பரவலாக அறியப்படும் Burj Al Arab என்ற சிறப்பு திட்டத்தின் மூளையும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் என்பவரே.
இங்கே தான் உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹொட்டல் ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |