பெரும் கோடீஸ்வரரின் மகன்... இவரின் ரூ 21430 கோடி நிறுவனத்தின் விளம்பரதாரராக அமிதாப் பச்சன்
வட இந்தியாவில் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்களில் நன்கு அறியப்படும் பெயர் தீபக் அகர்வால்.
இயக்குநராக தீபக்
பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் என்ற பிரபலமான தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநர் இவர். பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 21,430 கோடி என்றே கூறப்படுகிறது.
பெரும் கோடீஸ்வரரான Shivratan Agarwal என்பவரின் மகனே இந்த தீபக் அகர்வால். சிவராதனின் மொத்த சொத்து மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
1986 ல் ஷிவ்தீப் தயாரிப்புகள் எற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் 1993ல் அது பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் என பெயர் மாற்றம் பெற்றது. செப்டம்பர் 30, 2002 முதல் நிறுவனத்தின் முக்கிய இயக்குநராக தீபக் இருந்து வருகிறார்.
பிராண்ட் அம்பாசிடராக
தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் துறையில் சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் தீபக். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இவரது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.
தீபக்கின் கொள்ளு தாத்தா உருவாக்கிய நிறுவனமே, நாடும் முழுவதும் பிரபலமான Haldiram தின்பண்டங்கள். 2022 நவம்பரில் பிகாஜி ஃபுட்ஸ் பங்குச்சந்தையில் நுழைந்தது. தற்போது பிகாஜி ஃபுட்ஸ் பங்கு விலை ரூ 854.80 என விற்பனையாகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |